கடந்த முன்று நான்கு தினங்களாக டிஸ்கவரி சேனல் தமிழ் வர்ணனையுடன் ஒலி(ஒளி)பரப்பாவதை கேட்டேன்(கண்டேன்). முதலில் எரிச்சலடைந்தேன்.
காரணம் ஒன்று : ஆங்கில பட மொழிபெயர்ப்பு போல் குதறிவிடுவார்களோ ?
காரணம் இரண்டு :அனைவருக்கும் புரியுமா?
ஆனால் என்ன ஆச்சரியம்!
மிக தெளிவான தமிழில் ,மிக அழகாக மொழிபெயர்துள்ளனர்.
ஒரு நரி ஒரு துள்ளி ஓடும் மானை துரத்தி பிடிப்பதை மிக அழகாக,அனைவருக்கும் புரியும்படி தெளிவாக மொழிபெயர்துள்ளனர்.ஆங்கிலத்தில் ரசித்ததைவிட இன்னும் அழகாக ரசிக்கவும் முடிந்தது,இன்னும் நன்றாக புரிந்தது.இன்னொரு நல்ல மாறுதல் எனது அம்மாவும் ரசிக்க ஆரம்பித்துவிட்டார்கள் :)இன்று தமிழ் தொலைகட்சியில்(இது பிழை அல்ல ;) ) வாரும் (இதுவும் பிழை அல்ல ;)) பெரும்பாலான நிகழ்ச்சிகளை என் அம்மாவால் புரிந்துகொள்ள முடியாத அளவுக்கு ஆங்கிலம்.ஆனால் அவர்களால் டிஸ்கவரி சேனல் தமிழ் வர்ணனை மிக தெளிவாக புரிந்து கொள்ள முடிந்தது என்னாலும் ஆங்கிலத்தில் ரசித்ததைவிட இன்னும் அழகாக ரசிக்கவும் முடிந்தது,இன்னும் நன்றாக புரிந்தது.அப்பொழுது ஒன்று ஊரைத்தது! நம்மில் பலர் இப்படி ஆங்கிலம் தமிழ் இரண்டுக்கும் நடுவில் மாட்டிக்கொண்டு ,எந்த மொழியில சிந்திப்பதென்றெ தெரியாமல் முழிக்கின்றனர்.அப்படி மாட்டிகொள்ளாமல் இருக்க நான் செய்யும் முயற்சி இந்த பதிவு.கிட்டதட்ட பத்து ஆண்டுகளுக்கு பின் தமிழில் எழுதுகிறேன்,(பள்ளியில் கடைசியாக எழுதிய நினைவு).இத்தனை காலம் எழுதாமல் இருந்ததுக்கு வெட்கப்படுகிறேன் :(.கணிணியில் தமிழில் எழுதும் சூச்சமத்தை இன்னும் கற்கவில்லை, அதனால் சுருக்கமா முடித்துகொள்கிறேன்.ஆனால் இந்த முயற்சி தொடரும்.
தமிழ் பிழை இருப்பின் மன்னிக்கவும்,திருத்தவும் வேண்டுகிறேன்.
Wednesday, 14 October 2009
Subscribe to:
Post Comments (Atom)

Anna, wonderful!very good try..
ReplyDeleteKiruba
this is a test comments
ReplyDelete